தமிழ் இசையைப் பொறுத்தமட்டில் உலகின் கடைக்கோடியில் இருக்கும் தமிழனையும் சென்றடைவது திரை இசை மட்டுமே என்பது மறுக்க முடியாத உண்மை.. அத்தகைய திரையிசையில் முடிசூடா மன்னராக விளங்கிய திரு. T M சௌந்தரராஜன் அவர்களைப் பற்றியே இந்த கட்டுரை..
பிறப்பால் தமிழலரல்லாத இவரது தமிழின் ஆளுமைத்திறன் இன்றைய பாடகர்களை வெட்கித் தலைகுனியச் செய்யும்.. ஆம், இவர் மதுரையில் பிறந்த ஒரு சௌராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்தவர்.. "அந்தக்காலத்தில் இவர்களால் அவ்வளவு சரளமாக தமிழில் உரையாட முடியாது.. குழாயடி சண்டைகளின்போது கூட தமிழில் மற்றவர்கள் இவர்களைத் திட்டினால், அவர்களுக்கு ஈடுகுடுக்க முடியாமல் இவர்கள் பதிலுக்கு எல்லாம் உனக்குத்தான்" (நீ திட்டியது அனைத்தும் உன்னையே சேரும் என்கிற அர்த்தத்தில்) என்ற ஒரே வார்தையை மட்டுமே பயன்படுத்துவார்கள்" என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.. இத்தகைய பின்புலத்தில் வந்த ஒரு மனிதனால் சுத்தமான சுந்தரத்தமிழில் பாட முடிந்தது என்றால் அது ஆச்சர்யப் படவேண்டிய விஷயம் அல்லவா..
இவரிடம் பக்தி ரசம் சொட்டும் அருணகிரிநாதரின் முத்தைத்தரு பத்தித்திருநகை -யும் வரும்.. மேற்கத்திய இசையை அடிப்படையாகக் கொண்ட யார் அந்த நிலவு-ம் வரும்.. காதல் (ஞாயிறு என்பது பெண்ணாக), வீரம் (அச்சம் என்பது மடமையடா), பக்தி (சிந்தனை செய் மனமே), பாசம் (மலர்களைப் போல் தங்கை உறங்குகின்றாள்), சோகம் (தரை மேல் பிறக்க வைத்தான்). தத்துவம் (மனிதன் நினைப்பதுண்டு்) என்று மனிதனின் அத்தனை உணர்ச்சிகளையும் தன் பாடல்களில் மிக அற்புதமாக வெளிப்படுத்தியவர்..
அற்புதமான வரிகளைக் கொண்ட பாடல்களை திரு. கண்ணதாசன் இயற்றினாரென்றால், அதற்கு திரு. M S விஸ்வநாதன் அருமையாக மெட்டமைத்திருப்பார்.. அதை அடித்தட்டு மக்களிடம் கூட கொண்டுசென்று சேர்த்தவர் திரு.T M சௌந்தரராஜன் அவர்கள்தான் என்றால் அது மிகையாகாது.. முறையாக சங்கீதம் பயின்றவராதலால், திரையிசையோடு நின்றுவிடாமல் கர்நாடக இசையிலும் ஜொலித்தவர் இவர்..
இறுதியாக திரு. வைரமுத்து அவர்கள் சமீபத்தில் நமது T M சௌந்தரராஜனைப் பற்றி கூறியதையே நானும் இங்கே கூற விரும்புகிறேன்.. "இப்படியயொரு கலைஞன் அமைவது மீண்டும் அரிது. காது படைத்தவர்களே! வாழும்போதே கொண்டாடுங்கள் அந்த ஆலய மணிக்குரல் நாயகனை! "..
நன்றி!!