Pages

Sunday, February 20, 2011

பார்த்ததும், படித்ததும் ..

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு,தற்போதுதான் திரையரங்கிற்குச் சென்று படம் பார்க்கும் பழக்கத்தை ஆரம்பித்திருக்கின்றேன்..
தனக்கே தெரியாமல் என்னுள் நிறைய மாற்றங்களை சாத்தியப்படுத்திய அந்த அன்பருக்கு என் நன்றி.. <ஆனால், இன்னும் ஏன் அவரை நண்பர் என்று அழைக்க முடிவதில்லை என்று சத்தியமாக எனக்கு தெரியவில்லை :-)>

பார்த்தது:
கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்கு முன், மதுரையில் இருக்கும் பொழுது மன்மதன் பார்த்தது.. அதன் பிறகு சில மாதங்களுக்கு முன்னர் தான் எந்திரன் பார்த்தேன்.. என்னதான் ரஜினி படங்கள் எனக்கு பிடிக்காது என்று சொல்லிக்கொண்டாலும், எந்திரனுக்கு என்னை இழுத்துச் சென்றது சத்தியமாக ரஜினி தான்..
இதோ பிறகு கடந்த வார இறுதியில் யுத்தம் செய் பார்த்தேன்.. எனக்கு மிகவும் பிடித்திருந்தது.. எனக்கு தெரிந்தவரையில், கடந்த 15 ஆண்டுகளில், இது போல் ஒரு Decent Thriller படம் (தமிழில்) நான் பார்த்தது இல்லை..


அனுமதி சீட்டை வாங்கும் வேளையில் தான், இது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கான படம் என்று அதில் அச்சிடப்பட்டிருப்பதைப் பார்த்தேன்.. சென்றிருப்பதோ என் குடும்பத்தினருடன்.. ஆனாலும், மிஸ்கின் மீதிருந்த நம்பிக்கையில் வாங்கி விட்டேன்.. நல்லவேளை நான் ஏமாறவில்லை.. கண்டிப்பாக வேறு இயக்குனர்கள் படம் என்றால், நான் யோசித்திருப்பேன்.. மிஸ்கினை நான் நம்பியதற்க்கான காரணம் - அஞ்சாதே படம் வெளியான பொழுது அந்தப் படத்தில் வந்த ஒரு காட்சியைப் பற்றி அவர் அளித்த பேட்டியே..
வில்லனான பிரசன்னா, நாயகி விஜயலட்சுமி குளிப்பதை ஒரு துவாரத்தின் வழியாக பார்ப்பதாக ஒரு காட்சி வரும்.. அநேகமாக அனைத்து இயக்குனர்களும், அந்த காட்சில் பிரசன்னாவினது பார்வையை நமக்கும் காட்டி இருப்பார்கள்.. ஆனால் மிஸ்கின் காட்டவில்லை... ஏன் என்று கேட்டதற்கு அவர் சொன்ன காரணம் இதோ - "பார்வையாளர்களையும் நான் அயோக்கியர்களாக நான் மாற்ற விரும்பவில்லை".. இந்த பதில் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது.. அந்தக் காட்சியை பார்க்கமுடியாமல் போன கோபம் எனக்கு இருந்தாலும் ;-)

கதை என்ற அளவில் அஞ்சாதே-விற்கும் யுத்தம் செய்-க்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தாலும், அஞ்சாதேயினுடைய SHADE இந்த படத்தில் கொஞ்சம் நிறையவே இருப்பதாகவே எனக்குப்படுகிறது.. <நாடோடிகள் பார்க்கும் பொழுது சுப்ரமணியபுரம் ஞாபகம் வந்ததைப் போல்..>
இது போன்ற ஒரு அருமையான படத்தின் சுவாரசியமே, அதன் முடிவில் விலகும் மர்மங்கள் தான்.. அனால் இந்த படத்தில், மொட்டை அடித்த சுஜாவின் அம்மாவை போஸ்டரில் போட்டு, "ஒரு தாயின் வேட்கை" என்று விளம்பரம் செய்திருக்கின்றார்கள்..அது ஏன் என்று தயாரிப்பாளரைத் தான் கேட்க வேண்டும்..

படித்தது:
கிழக்கு பதிப்பகத்தில் 25.00 ரூபாயில் 80-பக்கங்கள் கொண்ட சிறிய புத்தகங்கள் நிறைய வெளியிட்டிருந்தார்கள்.. என் அம்மாவுடன் புத்தக கண்காட்சிக்கு சென்ற பொழுது வாங்கியிருந்தேன்.. "ஹிட்லர், நாதுராம் விநாயக் கோட்சே, அம்பேத்கர், சுபாஷ் சந்திர போஸ், அலெக்சாண்டர், நெப்போலியன், தந்தை பெரியார்" என்று கிட்டத்தட்ட 20 புத்தகங்கள் வாங்கியிருந்தேன்.. அனைத்தையும் படித்து முடித்து விட்டேன்.. இது போல் குறைந்த விலையில், தேவையான சுவாரசியமான விஷயங்களை உள்ளடக்கி உபயோகமாக புத்தகங்களை வெளியிட்டிருப்பது மிகவும் நன்றாக இருக்கிறது..
என் அம்மாவும் இதே விலையில் உள்ள சமையல் புத்தகங்களை அள்ளியிருந்தார்.. அனைத்தும் உபயோகமா இருப்பதாக அவர் சொல்வதை நம்ப கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் என் அப்பாவும் அதையே வழி மொழிந்திருப்ப்பதால் நம்பியிருக்கிறேன்.. ;-)
என் அப்பா அர்த்தமுள்ள இந்து மதம் வேண்டும் என்றிருந்தார்.. வாங்கியும் கொடுத்துவிட்டேன்.. இன்னும் அவர் அதை தொட்டபாடில்லை.. Bank Auditing என்று இந்த ஒரு மாதம் முழுவதும் ரொம்பவும் பிசியாக இருப்பதால் அவரால் படிக்கவில்லை.. அம்மா தான் அதையும் படித்துக் கொண்டிருக்கின்றார்..


ச.ந.கண்ணன் எழுதிய ராஜ ராஜ சோழன் புத்தகத்தை படித்து முடித்து விட்டேன்.. நன்றாக இருந்தது.. சோழர் கால ஆட்சி நிர்வாகம்/பெண்டிரது வாழ்க்கை முறை/தேவரடியார் குலம் என நிறைய விஷயங்கள் புதிதாக தெரிந்து கொண்டேன்..
போரில் தன்னுடன் தோற்ற மன்னர்களது மனைவியரை இன்பம் நுகரும் பொருட்களாக வைத்திருப்பது அக்காலத்தில் சாதாரணமான விஷயம் தான்.. அதையேதான் சோழனும் செய்திருக்கின்றான்.. No one is exceptional in this.. ;-)
நான் எதிர்பார்த்தது போலவே ஆதித்த கரிகாலனைப் பற்றி அவ்வளவாக இல்லை.. ராஜ ராஜ சோழனைப் பற்றிய புத்தகமாக இருந்தாலும் சற்றேனும் ஆதித்தனைப் பற்றி கொஞ்சம் கூடுதலாக எழுதி இருக்கலாம்..

நான் இப்பொழுது படித்துக் கொண்டிருப்பது சோவின் "திரையுலகைத் திரும்பிப் பார்கின்றேன்"..அவருடைய satire பாணியில் இருக்கும் என்று பார்த்தால், ரொம்பவும் subtle-ஆக இருக்கிறது.. :-(

நன்றி!!