Pages

Sunday, May 29, 2011

தியாகமும், உதவியும்..

சமீபத்தில், என் உடல் உபாதையை நிவர்த்தி செய்து கொள்வதற்காக இரண்டு வார விடுப்பில் ஒரு Physiotherapy Center சென்றிருந்தேன்..
அதன் மேலாளர் என்னை விட ஒரு பத்து வயது மூத்தவராக இருந்தார்.. கிருத்துவர்.. கிருத்துவம் போதித்த அன்பைப்பற்றி அவ்வப்பொழுது என்னிடம் சொல்லிக்கொண்டே இருப்பார்..

அவர் சொன்னதில் ஒரு விஷயம் என்னை மிகவும் கவர்ந்தது..
அது "உன்னை சுற்றி இருக்கும் மனிதர்களுக்கு உன்னால் முடிந்த ஒரு சிறு தியாகத்தை செய்து பார்.. பிறருக்கு உதவி செய்தால் வரும் மகிழ்ச்சியைக் காட்டிலும் அது பிரமாதமாக இருக்கும்"..

நான்: "நம்மை சுற்றி இருப்பவருக்கு உதவி செய்வதை தானே சொல்லுகின்றீர்கள்"..
அவர்: "உதவி அல்ல.. சிறு தியாகம்"..
நான்: "புரியவிலையே"
அவர்: உன்னிடம் நூறு ருபாய் இருக்கிறது.. அதை கொண்டு உன்னால் போதும் என்கிறமட்டும் நன்றாக சாப்பிடமுடியும்.. சாப்பிட்டு முடித்த பின் சற்று பணமும் உன்னிடம் மிஞ்சும்.. அப்பொழுது முடியாத ஒரு வறியவன் உன் கண்ணில் தென்படுகிறான்.. நீ முடிந்தமட்டும் சாப்பிட்டால் மீதமாகக்கூடிய பணம் கொஞ்சம் இருக்கும் அல்லவா.. அதை அவனுக்கு நீ கொடுக்கின்றாய்.. அது உதவி..
உன்னிடம் ஐம்பது ரூபாய் மட்டுமே இருக்கிறது.. அதை கொண்டு உன்னால் மட்டுமே திருப்தியாக சாப்பிடமுடியும்.. சாப்பிட்டு முடித்த பின் பணமேதும் மிஞ்சாது.. அப்பொழுது முடியாத ஒரு வறியவன் உன் கண்ணில் தென்படுகிறான்.. அவனுக்கு இருபது ருபாய் குடுத்து அவனையும் சாப்பிட வைத்து, நீயும் பாக்கி பணத்தில் சுமாராக சாபிடுகிறாய் என்றால் அது தியாகம்..
நான்: ம்ம்.. (மனதிற்குள் - என்னால் முடிந்தமட்டில் பிறருக்கு நான் உதவி செய்கின்றேன்.. தியாகம் செய்ய வாய்ப்பு கிடைத்தால், அதையும் செய்து பார்க்கலாம்)..

சில நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம்..
என் வீட்டை சுத்தம் செய்து, துணி துவைத்துக் கொடுக்கும் (சற்றே வயதான) பெண் மிகுந்த முக வாட்டத்துடன் தன் வேலையே செய்து கொண்டிருந்தார் அன்று..
அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.. நல்ல பெண்மணி..
அவர் தன் பொண்ணுக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயித்திருந்தார்..
அவர்: "நேற்று என்னுடைய மொபைல் போன் உடைந்து விட்டது.. அதை வாங்க குறைந்த பட்சம் இரண்டாயிரம் ருபாய் ஆகும்.. அது இருந்தால் நான் வேறு ஏதாவது கல்யாண செலவிற்கு பயன்படுத்திக் கொள்வேன்.. இந்த கல்யாண நேரத்தில் என்னிடம் செல்போன் இல்லாதது மிகவும் கஷ்டமாக இருக்கிறது"..
நான்: "(மனதிருக்குள் - ஆம்.. இரண்டாயிரம் ரூபாய் இருந்தால் அவருக்கு கண்டிப்பாக கல்யாண செலவிற்கு கை கொடுக்கும்.. நம்மிடம் இரண்டு மொபைல் இருக்கிறதே.. அதில் ஒன்று இன்னமும் பெங்களூர் சிம் கார்டுடன் சும்மாக தானே இருக்கிறது.. அதை கொடுத்து இவருக்கு உதவலாமே)"..

என் சிம் கார்டை நீக்கிவிட்டு அவரிடம் என் மொபைல் போனை கொடுத்தேன்.. அதை மிகுந்த மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றார்..

வழக்கமாக மற்றவருக்கு உதவி செய்தால் வரும் மகிழ்ச்சியை விட சற்று கூடுதல் மகிழ்ச்சி இருப்பதாக உணர்கிறேன்..
(Who knows, It could be my illusion)..
நான் செய்த இந்த காரியத்தில், உதவி என்பதையும் தாண்டி ஒரு சிறு தியாகமும் இருப்பதாக என் மனதிற்கு படுகிறது..
அந்த நண்பரிடம் மேலும் பேச ஆவலாய் இருக்கிறேன்..