Pages

Sunday, February 20, 2011

பார்த்ததும், படித்ததும் ..

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு,தற்போதுதான் திரையரங்கிற்குச் சென்று படம் பார்க்கும் பழக்கத்தை ஆரம்பித்திருக்கின்றேன்..
தனக்கே தெரியாமல் என்னுள் நிறைய மாற்றங்களை சாத்தியப்படுத்திய அந்த அன்பருக்கு என் நன்றி.. <ஆனால், இன்னும் ஏன் அவரை நண்பர் என்று அழைக்க முடிவதில்லை என்று சத்தியமாக எனக்கு தெரியவில்லை :-)>

பார்த்தது:
கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்கு முன், மதுரையில் இருக்கும் பொழுது மன்மதன் பார்த்தது.. அதன் பிறகு சில மாதங்களுக்கு முன்னர் தான் எந்திரன் பார்த்தேன்.. என்னதான் ரஜினி படங்கள் எனக்கு பிடிக்காது என்று சொல்லிக்கொண்டாலும், எந்திரனுக்கு என்னை இழுத்துச் சென்றது சத்தியமாக ரஜினி தான்..
இதோ பிறகு கடந்த வார இறுதியில் யுத்தம் செய் பார்த்தேன்.. எனக்கு மிகவும் பிடித்திருந்தது.. எனக்கு தெரிந்தவரையில், கடந்த 15 ஆண்டுகளில், இது போல் ஒரு Decent Thriller படம் (தமிழில்) நான் பார்த்தது இல்லை..


அனுமதி சீட்டை வாங்கும் வேளையில் தான், இது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கான படம் என்று அதில் அச்சிடப்பட்டிருப்பதைப் பார்த்தேன்.. சென்றிருப்பதோ என் குடும்பத்தினருடன்.. ஆனாலும், மிஸ்கின் மீதிருந்த நம்பிக்கையில் வாங்கி விட்டேன்.. நல்லவேளை நான் ஏமாறவில்லை.. கண்டிப்பாக வேறு இயக்குனர்கள் படம் என்றால், நான் யோசித்திருப்பேன்.. மிஸ்கினை நான் நம்பியதற்க்கான காரணம் - அஞ்சாதே படம் வெளியான பொழுது அந்தப் படத்தில் வந்த ஒரு காட்சியைப் பற்றி அவர் அளித்த பேட்டியே..
வில்லனான பிரசன்னா, நாயகி விஜயலட்சுமி குளிப்பதை ஒரு துவாரத்தின் வழியாக பார்ப்பதாக ஒரு காட்சி வரும்.. அநேகமாக அனைத்து இயக்குனர்களும், அந்த காட்சில் பிரசன்னாவினது பார்வையை நமக்கும் காட்டி இருப்பார்கள்.. ஆனால் மிஸ்கின் காட்டவில்லை... ஏன் என்று கேட்டதற்கு அவர் சொன்ன காரணம் இதோ - "பார்வையாளர்களையும் நான் அயோக்கியர்களாக நான் மாற்ற விரும்பவில்லை".. இந்த பதில் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது.. அந்தக் காட்சியை பார்க்கமுடியாமல் போன கோபம் எனக்கு இருந்தாலும் ;-)

கதை என்ற அளவில் அஞ்சாதே-விற்கும் யுத்தம் செய்-க்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தாலும், அஞ்சாதேயினுடைய SHADE இந்த படத்தில் கொஞ்சம் நிறையவே இருப்பதாகவே எனக்குப்படுகிறது.. <நாடோடிகள் பார்க்கும் பொழுது சுப்ரமணியபுரம் ஞாபகம் வந்ததைப் போல்..>
இது போன்ற ஒரு அருமையான படத்தின் சுவாரசியமே, அதன் முடிவில் விலகும் மர்மங்கள் தான்.. அனால் இந்த படத்தில், மொட்டை அடித்த சுஜாவின் அம்மாவை போஸ்டரில் போட்டு, "ஒரு தாயின் வேட்கை" என்று விளம்பரம் செய்திருக்கின்றார்கள்..அது ஏன் என்று தயாரிப்பாளரைத் தான் கேட்க வேண்டும்..

படித்தது:
கிழக்கு பதிப்பகத்தில் 25.00 ரூபாயில் 80-பக்கங்கள் கொண்ட சிறிய புத்தகங்கள் நிறைய வெளியிட்டிருந்தார்கள்.. என் அம்மாவுடன் புத்தக கண்காட்சிக்கு சென்ற பொழுது வாங்கியிருந்தேன்.. "ஹிட்லர், நாதுராம் விநாயக் கோட்சே, அம்பேத்கர், சுபாஷ் சந்திர போஸ், அலெக்சாண்டர், நெப்போலியன், தந்தை பெரியார்" என்று கிட்டத்தட்ட 20 புத்தகங்கள் வாங்கியிருந்தேன்.. அனைத்தையும் படித்து முடித்து விட்டேன்.. இது போல் குறைந்த விலையில், தேவையான சுவாரசியமான விஷயங்களை உள்ளடக்கி உபயோகமாக புத்தகங்களை வெளியிட்டிருப்பது மிகவும் நன்றாக இருக்கிறது..
என் அம்மாவும் இதே விலையில் உள்ள சமையல் புத்தகங்களை அள்ளியிருந்தார்.. அனைத்தும் உபயோகமா இருப்பதாக அவர் சொல்வதை நம்ப கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் என் அப்பாவும் அதையே வழி மொழிந்திருப்ப்பதால் நம்பியிருக்கிறேன்.. ;-)
என் அப்பா அர்த்தமுள்ள இந்து மதம் வேண்டும் என்றிருந்தார்.. வாங்கியும் கொடுத்துவிட்டேன்.. இன்னும் அவர் அதை தொட்டபாடில்லை.. Bank Auditing என்று இந்த ஒரு மாதம் முழுவதும் ரொம்பவும் பிசியாக இருப்பதால் அவரால் படிக்கவில்லை.. அம்மா தான் அதையும் படித்துக் கொண்டிருக்கின்றார்..


ச.ந.கண்ணன் எழுதிய ராஜ ராஜ சோழன் புத்தகத்தை படித்து முடித்து விட்டேன்.. நன்றாக இருந்தது.. சோழர் கால ஆட்சி நிர்வாகம்/பெண்டிரது வாழ்க்கை முறை/தேவரடியார் குலம் என நிறைய விஷயங்கள் புதிதாக தெரிந்து கொண்டேன்..
போரில் தன்னுடன் தோற்ற மன்னர்களது மனைவியரை இன்பம் நுகரும் பொருட்களாக வைத்திருப்பது அக்காலத்தில் சாதாரணமான விஷயம் தான்.. அதையேதான் சோழனும் செய்திருக்கின்றான்.. No one is exceptional in this.. ;-)
நான் எதிர்பார்த்தது போலவே ஆதித்த கரிகாலனைப் பற்றி அவ்வளவாக இல்லை.. ராஜ ராஜ சோழனைப் பற்றிய புத்தகமாக இருந்தாலும் சற்றேனும் ஆதித்தனைப் பற்றி கொஞ்சம் கூடுதலாக எழுதி இருக்கலாம்..

நான் இப்பொழுது படித்துக் கொண்டிருப்பது சோவின் "திரையுலகைத் திரும்பிப் பார்கின்றேன்"..அவருடைய satire பாணியில் இருக்கும் என்று பார்த்தால், ரொம்பவும் subtle-ஆக இருக்கிறது.. :-(

நன்றி!!

8 comments:

  1. நானும் யுத்தம் செய், நந்தலாலா இரண்டுமே பார்க்க வேண்டும். எப்போது முடிகிறதோ தெரியவில்லை :(

    ReplyDelete
  2. நந்தலாலா நானும் இன்னும் பாக்கல.. ரொம்ப அழுக வச்சிருவாங்களோன்னு பயமா இருக்கு..

    ReplyDelete
  3. INNUM PATHVUGALAI YETHIR PAAARKIREN UNGALIDAM IRUNTHU...


    http://vallinamguna.blogspot.com/2011/03/blog-post_17.html


    போட்டசுங்க .. அவர பத்தி இதுக்கு முந்தின போஸ்ட் ல போட்டசுங்க

    ReplyDelete
  4. Good observation of Mysskin's interview. Yet another interesting post.

    ReplyDelete
  5. //பார்வையாளர்களையும் நான் அயோக்கியர்களாக நான் மாற்ற விரும்பவில்லை//

    என்ன மாம்ஸ், பொண்ணு குளிக்கிறதா பார்த்தா அயோக்கியனா? யூ-ட்யூப்-ல போட்டா தான் தப்பு ;)

    தண்ணி அடிக்கிறது, துப்பாக்கியால சுடுறது, பொண்ணுங்கள கடத்துற டெக்னிக்னு காட்டுறாரே அது ஓ. கே.வா?

    ReplyDelete
  6. இதுல என்னோட கருத்து என்னன்னா -

    கொலை பண்ணினாலோ, தண்ணி அடிச்சாலோ கூட ஓரளவுக்கு அதுல நியாயம் இருந்தா - வீட்லயோ/ஊர்லையோ ஏத்துப்பாங்க.. (இத நான் முழு மனசோட சொல்லலேன்னாலும், I'm just trying to speak conventionally)..
    ஆனா அதுவே பாலியல் ரீதியான ஒரு தப்ப பண்ணிட்டு வந்தா கண்டிப்பா யாருமே ஏத்துக்கமாட்டாங்க.. ஒரு வேண்டாதவனா/அயோக்கியனா தான் பார்ப்பாங்க..

    பெருமளவு நம்ம தலைமுறைல இல்லேன்னாலும், பெரும்பான்மையான நம்ம முந்தின தலைமுறை ஆட்கள் கிட்ட மிஞ்சி இருக்கிற ஒரு நல்ல விஷயம் இது.. கண்டிப்பா நாம அத அவுங்ககிட்ட இருந்து கத்துக்கணும்..

    ReplyDelete
  7. //கொலை பண்ணினாலோ, தண்ணி அடிச்சாலோ கூட ஓரளவுக்கு அதுல நியாயம் இருந்தா//
    கொலை செய்வதிலும், தண்ணி அடிப்பதிலும், என்ன நியாயம் இருக்க முடியும்? அதே வகையில் பாலியல் தப்பிற்கு நியாயம் இருக்க முடியாதா?

    கொலை செய்ய எல்லோருக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. தண்ணி அடிப்பதற்கு பெரும்பாலானோருக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆனால், எல்லோருக்கும் கிடைப்பது இல்லை.

    எனக்கு தெரிஞ்சு பாலியல் தப்பு மட்டும் தான், எல்லாரும் செய்ய முடிஞ்சா எளிதான ஒன்று. பெற்றோரும் கூட, இதைத் தான் வயது வந்த ஆணிடமோ அல்லது பெண்ணிடமோ எதிர் பார்ப்பார்கள். இதில் "வயது வந்த" - இது காலத்துக்கு காலம் மாறிக்கொண்டு வந்திருக்கிறது. ஒரு காலத்தில் பத்து வயதில் திருமணம். இப்போது முப்பது தவறினால் நாற்பது. இவர்கள் யார்? என் ஹார்மோன்களுக்கு கட்டளையிட? பசி, தூக்கம் போலத்தானே இதுவும்?

    வசதி இருக்கிறவன், எப்படி எப்படியோ தன் தேவைகளை தீர்த்துக்கொள்கிறான். வசதி இல்லாதவன் / செலவு செய்ய முடியாதவன் என்ன செய்வான்?

    //அத அவுங்ககிட்ட இருந்து கத்துக்கணும்//

    எங்க தாத்தாவுக்கு ரெண்டு சம்சாரம், அவங்க அப்பாவுக்கு நிறைய கீப்புகள். உங்க வீட்டுலயும், அப்படி ஆளுங்க இருந்து தான் இருப்பாங்க. சைட் அடிக்கும் வயதில், அப்பாவும் பொறுக்கிதான். அவருக்கே ஒரு பையன் பிறந்தா அவன ஒழுக்க சீலனா வளக்கணும் (அவங்க அப்பா போலவே). இந்த நடிப்பு தான், நம்மை இப்படி சிந்திக்க வைக்கிறது.

    ReplyDelete
  8. ஏன் மாம்ஸ், ஏதோ தெரியாத்தனமா கொஞ்சம் பொங்கிட்டேன். அதுக்காக இப்படியா எகடாசி பேசு மடக்குறது.. :-)

    //எனக்கு தெரிஞ்சு பாலியல் தப்பு மட்டும் தான், எல்லாரும் செய்ய முடிஞ்சா எளிதான ஒன்று.
    >> இப்படி ரொம்ப சுளுவா செய்யக்கூடிய பாலியல் தப்புனால, அத செஞ்சவனுக்கு கெடைக்குற IMPACT ரொம்பவும் அதிகம்தான்றத கண்டிப்பா நீ மறுக்க மாட்டேன்னு நம்புறேன்..

    // வசதி இருக்கிறவன், எப்படி எப்படியோ தன் தேவைகளை தீர்த்துக்கொள்கிறான். வசதி இல்லாதவன் / செலவு செய்ய முடியாதவன் என்ன செய்வான்?
    >> முந்தி நாம அடிக்கடி சொல்ற டயலாக் ஞாபகம் வருது.. "பல் இருக்கவன் பக்கோடா சாப்பிட்டுறான்.. நம்மால அது முடியுமா.. " :-)

    //உங்க வீட்டுலயும், அப்படி ஆளுங்க இருந்து தான் இருப்பாங்க
    >> என்னளவில், என்னுடைய ரெண்டு முந்தின தலைமுறை ரொம்பவே ஒழுக்கமா தான் இருந்திருக்கு.. அதனால, எனக்கு தெரிஞ்ச அளவுல நான் எழுதிருக்கேன்.. அதுக்கு முந்தின தலைமுறை நீ சொல்ற மாதிரி இருந்திருக்கலாம்.. வாய்ப்புகள் இருக்கு..

    ReplyDelete