Pages

Monday, January 09, 2012

கடவுளும் பகுத்தறிவாளனும்

"அறை எண் 305 -ல் கடவுள்", திரைப்படத்தில் கடவுளும் பகுத்தறிவாளனும் மேற்கொள்ளும் விவாதம் கலந்த ஒரு உரையாடல் காட்சி மிகவும் அழகாக படமாக்கப்பட்டிருக்கும்..

இந்தக் காட்சியில், நாத்திகனுக்கு தன்னுடன் இருப்பது கடவுள் தான் என்பது தெரியாது.. காரணம் - கடவுளானவர் தன் அடையாங்களை இழந்துவிட்டு நம்மை போல் ஒரு சராசரி மனிதனாக வாழ்ந்துகொண்டிருப்பார் அந்தத் தருணத்தில்..
 

"கடவுள் என்பது யார்? அவர் இருக்கிறாரா இல்லையா?அவர் மனிதருக்கு தேவையா? தேவையெனில் எந்த விதத்தில்?" என்று பல விஷயங்களை மிகவும் கவனமாக இயக்குனர் சிம்புதேவன்  கையாண்டிருப்பார்..

என்னுடைய புரிதலின்படி, இந்த விவாத காட்சியில் கடவுளின் கை ஓங்கி இருப்பதாக காட்டப்பட்டிருந்தாலும், கடவுளாகப்பட்டவரின் வாயாலேயே "அன்புதான் கடவுள்.. மனிதனது வாழ்கையை பக்குவபடுத்தி, துன்ப காலங்களில் துணையாக இருக்க உதவும் ஒரு துணையே கடவுள்" என்று அருமையாக விளக்கப்பட்டிருக்கும்..

இவ்விடத்தில் திருமூலர் அருளிய திருமந்திரத்தில் வரும் ஒரு பாடலை பதிவிடுவது பொருத்தமாக இருக்கும்..

     அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
     அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
     அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
     அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே

இப்பாடலின் முதலிரு வரிகளில் - "அன்பும் சிவமும் வேறு வேறல்ல.. இரண்டும் ஒன்றுதான்" என்றும், பின்னிருவரிகளில் "அந்த அன்பிலே மனம் குழைபவரே கடவுளை அடைவர்.. அன்புதான் கனிந்து கனிந்து நிறைவு நிலையில் சிவம் ஆகிறது" என்றும் விளக்கப்பட்டிருக்கிறது..

முன்னிரு வரிகளுக்கு நான் உடன்பட்டாலும், பின்னிரு வரிகளுக்கு நான் முரண்படுகிறேன்.. :-)

 "கடவுள் என்றொருவர் உள்ளார்.. அவர் மேலிருந்து நம்மை காக்கின்றார்.. தவறு செய்பவர்களை தண்டிக்கின்றார்/ மன்னிகின்றார்" போன்று என் பால்ய வயதுகளில் ஊட்டப்பட்ட கருத்துக்களில் நம்பிக்கை இல்லாதவன் நான்..

"கடவுள் இல்லை என்பதுவே என்னுடைய கருத்து"..

"கடவுள் என்று (ஒருவர்) ஒன்று உண்டு. அது (அவர்) விளக்கப்பட வேண்டும்" என்று என்னிடம் கேட்டால், "நம்மிடம் அன்பு செலுத்தும் சக மனிதர்கள் தான் கடவுள்" என்பேன்.. இதுதான் என்னுடைய சிந்தனை..

நன்றி!!

3 comments:

  1. நல்ல அலசல் பிரசன்னா.

    //////"நம்மிடம் அன்பு செலுத்தும் சக மனிதர்கள் தான் கடவுள்"/////
    இப்படி தான் நானும் நினைப்பேன்........... ஆன இது ரொம்ப அறிய விஷயம்.

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி சிங்கம்..
    //நம்மிடம் அன்பு செலுத்தும் சக மனிதர்கள் தான் கடவுள் -
    இவ்வகையிலான கடவுள்கள்தான் நம் கண்களுக்கு தெரிவார்கள்.. அவர்களிடம் உரிமையாக பேச முடியும்.. கேள்வி கேக்க முடியும்.. அன்பு செலுத்த முடியும்.. ஏன், பிடிக்கவில்லை என்றால் கோபித்துக் கொள்ளக்கூட முடியும்.. இல்லையா.. :-)

    ReplyDelete
  3. //ஏன், பிடிக்கவில்லை என்றால் கோபித்துக் கொள்ளக்கூட முடியும்.
    சரி தான், சமீபத்தியப் பதிவுகள் எதுவும் இல்லையே? காரணம் ஏனோ?

    ReplyDelete